சிலியில் வறண்டு காணப்பட்ட ஏரிகள் மழையின் காரணமாக மீண்டும் உயிரிப்பித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சிலியில் உள்ள பெனுவேலாஸ் ஏரியில் கடும் வெப்பம் காரணமாக வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக வன உயிரினங்கள் நீர் ஆதாரமின்றி தவித்து வந்தன.
இந்நிலையில் கால நிலை காரணமாக அப்பகுதியில் கனமழை பெய்ததில் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வன வாழ் உயிரினங்கள் மற்றும் அண்டை நகர மக்கள் பயனடைவர் என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.