தன்னிடம் கதை செல்ல வரும் இயக்குநர்கள் திரைத்துறையில் என்னுடைய பிம்பம் மாறும் என்று தெரிவிப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை சன்னிலியோன் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி மற்றும் பலர் நடித்துள்ள கொட்டேஷன் கேங் என்ற திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகை சன்னிலியோன், தம் மீது நம்பிக்கை வைத்து கதாபாத்திரம் உருவாக்கியதற்கு நன்றி என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் திரைத்துறையில் கதைகள் என்னுடைய பிம்பத்தை மாற்றும் என்று தெரிவிப்பதாகவும், அதை கேட்கும் போது சந்தோஷமாக இருப்பதாகவும் சன்னி லியோன் தெரிவித்தார்.