பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ – மாணவிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் பரிசு வழங்கி கெளரவித்தார்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்த ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
அதன்படி முதல்கட்டமாக பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து விழாவுக்கு வந்த அனைவருக்கும் காலை உணவாக பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது.
இதனையடுத்து விழா அரங்குக்கு வருகைதந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பார்வையாளர்களுடன் அமர்ந்து அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ – மாணவிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் பரிசு வழங்கி கெளரவித்தார்.