கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் கைதானவர்களில் 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி போலீசாா் 21 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் மெத்தனால் வினியோகம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜ், மாதேஷ், சிவக்குமாா் உள்ளிட்ட 11 பேரை மட்டும் காவலில் எடுத்து விசாாிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதற்கான மனுவை இன்று மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசாா் தாக்கல் செய்ய உள்ளனர்.