குவாத்தமாலாவில் உள்ள அமாடிட்லான் ஏரியில் அதிக அளவு குப்பைகள் தேங்கி வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நகரங்களில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் கழிவுகளை சிறிய படகு மூலம் ஏரியில் கொட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆரவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.