குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக்கொன்ற தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜுக்கு ஜினு, ஜிஜின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான ஜினு, தந்தையிடம் தகறாரில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் ஜினுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஜினு உயிரிழந்த நிலையில் காவல்நிலையத்தில் செல்வராஜ் சரணடைந்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.