திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி இந்தியன் வங்கி கிளையில் அடகுவைத்த நகைகள் எடை குறைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிள்ளையார்பட்டி இந்தியன் வங்கி கிளையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் நகைகளை அடகு வைப்பதும், மீட்பதும் வழக்கம்.
இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகையை மீட்டு, எடையை பார்த்தபோது 4 கிராம் வரை எடை குறைந்திருப்பது தெரியவந்தது.
இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் பலர் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.