இயற்கை வளக்கொள்ளை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடத்த தமிழக அரசு மறுப்பது ஏன் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,
தமிழகத்தில் இயற்கை வள கொள்ளை எவ்வாறு நடைப்பெற்று வருகிறது என்பதைக் கூறும் வகையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை அளித்தோம்.
தமிழகத்தில் 4,700 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தில் கனிம வளக் கொள்ளை நடைப்பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து கவனஇர்ப்பு தீர்மானத்தை அளித்த போதிலும் அதனை ஏற்க சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மறுத்துவிட்டார்.
அனுமதிக்கப்பட்ட இடங்களைவிட அதிகளவில் மணற் கொள்ளை நடைப்பெற்றுள்ளது. அரசுக்கு வருமானம் வராமல் இடையில் உள்ளவர்களே அதனை எடுத்துக் கொள்கிண்ரனர்
இதன் மீது விவாதம் மேற்கொள்ள தமிழக அரசு மறுப்பது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். நீர்வளத்துறை சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கப் இன்று அளிக்கப்பட்டுள்ளது.
வரக்கூடிய காலத்தில் வரும் காலங்களில் இந்த கப்களில் மணலை நிரப்பி இதுதான் மணல் என்று காட்டும் சூழல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.