கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அனுதாபப்படும் அரசும், பொதுமக்களும், விவசாயிகள் இறக்கும்போது மட்டும் பரிதாபம் படுவதில்லை என இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன், இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டதாகவும், ஆனால், தினமும் பல்வேறு இடர்பாடுகளில் சிக்கி உயிரிழக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளை பற்றி பரிதாபப்படவும், உதவி செய்யவும் யாரும் இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.