நில அபகரிப்பு வழக்கில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன், ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதைத்தொடர்ந்து ராஞ்சி பிர்சா முண்டா சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன், தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.