நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களைக் குழப்ப வேண்டாமென எதிர்க்கட்சியினருக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என்றும், தேசிய தேர்வுகள் முகமையை சீரமைக்க உயர்நிலைக் குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ரத்து செய்யப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாமல், நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதத்துக்கு எதிர்க்கட்சியினர் முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களைக் குழப்ப வேண்டாம் எனவும் அவர் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.