குடியாத்தம் அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் வைரம் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு, மதுபாட்டில்களை இறக்க ஊழியர்கள் வந்தனர்.
அப்போது, பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியாத்தம் மேல் ஆளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், மது பாட்டில்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது.