நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த நரி பத்திரமாக மீட்கப்பட்டது.
தேங்கள்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரடியானூரில் சபரிநாதன் என்பவர் வழக்கம்போல் கிணற்றில் இருந்து வயலுக்கு நீர் இறைப்பதற்காக மோட்டாரை இயக்க சென்றுள்ளார்.
அப்போது வயர் அறுந்து கிடந்ததையடுத்து கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தபோது நரி இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர்
1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நரியை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காப்புக்காடு பகுதியில் நரி பத்திரமாக விடுவிக்கப்பட்டது.