கரூரில், போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.
அங்கு இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த வெங்கமேடு பகுதியை சேர்ந்த சூர்யா, மனோஜ் ஆகியோரை பிடித்து சோதனை செய்தபோது திருப்பூரிலிருந்து போதை மாத்திரைகைகளை வாங்கி வந்து கரூரில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து போதை மாத்திரைகளையும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.