டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க தொழில்நுட்பக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து, விரைவில் இந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்று டெல்லி சர்வதேச விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் விமான நிலையத்தில் சீரமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அதன் நிர்வாகம் கூறியுள்ளது.