தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி படுகாயமடைந்தார்.
பங்களாப்பட்டி பிரிவில் ஜெயபிரகாஷ் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரகாஷ், உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.