போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக்கை, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் வெளிநாடுகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய வழக்கில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் போதைப் பொருட்களை கடந்தி வெளிநாடுகளில் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை, சினிமா உள்பட பல்வேறு துறைகளில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் மனைவி, தம்பி மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.