பேரணாம்பட்டு அருகே செல்போன் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
வேலூர் மாவட்டம் எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த அங்காளன் என்பவர், செல்போன் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பூட்டிய கடையில் இருந்து புகை வந்ததால், அருகில் இருப்பவர்கள் தீயணைப்பு துறை மற்றும் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.