சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்குடியில் 20-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில் தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்து வந்தன.
இதனையடுத்து காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே மேற்கொள்ளபட்ட திடீர் ஆய்வில், 10-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் வைக்கப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.