உலக அளவிலான தரவரிசையில் முன்னணி இடம் பெற்று சிறந்து விளங்கியதற்காக, வெற்றி பெற்றதற்காக இந்தியப் பல்கலைக்கழகங்களைப் பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை அமைப்பின் சர்வதேச விவகாரப் பிரிவு தலைமை அதிகாரி பில் பாட்டி வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசை பட்டியலில் இடம் பெறும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சீர்திருத்த கொள்கைகளே காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், கடந்த 2017-ம் ஆண்டில், டைம்ஸ் உயர்கல்வி தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் 42 மட்டுமே இடம் பெற்றன.
உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2024ம் ஆண்டு 91 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில்,பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.இரண்டாவது இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.
2025-ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் இடம் பெற இந்தியாவின் 133 பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளன.
உலகளவில் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது” என Phil Baty ஃபில் பட்டி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, “உலகஅரங்கில் இந்திய பல்கலைக்கழகங்கள் அதிகளவில் கால் பதிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், தரமான கல்விமுறைக்கு கொடுத்த முக்கியத்துவமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர், கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உயர்கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்றாகும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.