தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் வருகை தந்து ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஊடக உலகில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சி, தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு தலைவர்கள் நேரில் வருகை தந்து, தமிழ் ஜனம் தொலைக்காட்சி மென்மேலும் வளர வாழ்த்தினர்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு இன்று வருகை தந்தார். நிர்வாகிகளும், ஊழியர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர். தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தி அரங்கம், செய்திப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.
மேலும், அலுவலக ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன், பணி விபரங்களையும் கேட்டறிந்தார். அண்ணாமலையுடன் ஊழியர்கள் புகைப்படமும் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.