சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் துரித பயண வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
இந்த திட்டம் சென்னையில் தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் தற்போது 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த 9 ஆண்டுகளில் மெட்ரோ ரயில்களில் 29 கோடியே 87 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, கியூ ஆர் குறியீடு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி டிக்கெட் எடுத்துக்கொண்டால் 20 விழுக்காடு சலுகைகளும் செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்ட மெட்ரோ ரயில்கள் வெற்றிகரமாக செயல்பாட்டில் இருந்துவரும் நிலையில் 2-ம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
முழு வீச்சில் நடைபெற்று வரும் இந்த பணிகள் 3 வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
2028-ம் ஆண்டுக்குள் முடிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.