தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே அண்ணனை கத்தியால் குத்தி கொலைசெய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மேல மருத்துவக்குடி கிராமத்தில் உள்ள எருதுக்கார தெருவில் 3 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில் அங்கு வசித்து வந்த அரவிந்தன், குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது அரவிந்தனின் அண்ணன் பழனிவேல், தம்பியிடம் சமரசம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஆத்திரமடைந்த அரவிந்தன், பழனிவேலை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.