ஈரோட்டில் மதுபோதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த இளைஞர் மதுபோதையில் தகாத வார்த்தைகளை பேசியபடி பயணித்துள்ளார்.
இதைக் கண்ட பேருந்து நடத்துநர், போதை ஆசாமியை வேப்பம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், கல்லால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.