தமிழக அரசு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது சிறந்த நகைச்சுவை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த 2023 -ம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை எனவும் அண்ணாமலை சுட்டிக் காட்டியுள்ளார்.
திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, 2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்ததாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தனையும் செய்துவிட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.