திருச்சியில் வாகன தணிக்கையின்போது காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை சோதனையிட்டபோது அவர்கள் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தப்பியோட முயன்ற இளைஞர்களை போலீசார் பிடிக்க முயற்சித்தபோது முதல் நிலை காவலர் அப்துல் காதர் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலாஜி, சிலம்பு, நித்திஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.