தஞ்சாவூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த மோப்ப நாயின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சீசர் என்ற மோப்ப நாய் பணியாற்றி வந்தது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற இந்த நாய் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சீசருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து 3 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க மோப்ப நாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.