ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்தியா தலைமையில் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைமையகமான ஜெனீவாவில், நிரந்தர பிரதிநிதித்துவ அளவிலான கூட்டத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்தது.
புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக கொழும்பு செயல்முறை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதில், ஆசியாவைச் சேர்ந்த 12 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்ற நிலையில், முதல் கூட்டத்தை ஜெனீவாவில் தலைமையேற்று நடத்தியது.
இதில் தலைமையேற்று பேசிய வெளியுறவுத் துறை செயலர் முக்தேஷ் பர்டேசி, உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.