தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலுள்ள சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் நடிகை ப்ரியா ஆனந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
இக்கோயிலுக்கு வருகை தந்த ப்ரியா ஆனந்த் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் யானையிடம் ஆசி பெற்றார்.
அப்போது கோயில் வளாகத்தில் படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடியதை கண்டு ரசித்தார். பின்னர் இவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
















