டெல்லி அமைச்சர் அதிஷி மீதான அவதூறு வழக்கின் விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜகவினர் பேரம் பேசியதாக அதிஷி தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அதிஷி மீது பாஜக தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது அதிஷி காணொலி வாயிலாக ஆஜரானார். அப்போது புகார் மனுவின் பிரதி, அதிஷி தரப்பு வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.