தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கான உதவித்தொகை உயர்த்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் என்டிஆர்எஃப் வீரர்களின் மலையேற்ற பயிற்சியைத் தொடங்கிவைத்த அவர், என்டிஆர்எஃப் வீரர்களுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நினைவுகூர்ந்தார்.
இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவித்தொகையை 40 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இதன்மூலம் 16 ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்றும் அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மேலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் மத்திய ஆயுதப் படையினர் அனுப்பிவைக்கப்படுவர் என்று கூறிய அவர், இதற்கான செயல்திட்டம் விரைவில் தயாராகும் என்றும் உறுதியளித்தார்.