நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குஜராத்தில் ஏழு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தேசிய தேர்வுகள் முகமையை மேம்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பொதுமக்களிடம் ஆலோசனை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குஜராத்தில் அகமதாபாத் மற்றும் கோத்ராவில் ஏழு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.