லடாக்கில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
லடாக்கில் நியோமா- சுஷுல் அருகே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் டி-72 ரக டேங்கரில் ஷியோக் ஆற்றை ராணுவ வீரர்கள் அதிகாலை ஒரு மணியளவில் கடந்து சென்றபோது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் டேங்கரில் இருந்த ஐந்து ராணுவ வீரர்களும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களை சக ராணுவ வீரர்கள் தேடிவந்த நிலையில், நீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது