கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள் தண்டனையும், 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கும் வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டத்திருத்தம் மீதான விவாதத்தின்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும்தான் பொறுப்பு என்று தெரிவித்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒருநபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதால், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்து பேசிய அவர், இதில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அழைப்பு வந்ததாகவும், இதுகுறித்து இன்டர்போல் விசாரிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.