பொள்ளாச்சியை அடுத்த மஞ்ச நாயக்கனூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய ரவி, மகேந்திரன் உள்ளிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் 5 பேருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரவி, மகேந்திரன் ஆகிய இருவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை KMCH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தகவலறிந்த போலீசார் கள்ளச்சாராயம் அருந்திய இடத்தை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.