தேனியிலுள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர் நலச் சட்டங்களின்படி அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தின் காரணமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.