சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீர் கலந்து குடிநீர் குடித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பீகாரை சேர்ந்த தம்பதியர், 11 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் சென்னைக்கு வேலைத்தேடி கடந்த 15 நாட்களுக்கு முன்பு வந்துள்ளனர். சைதாப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், 11 வயது சிறுவனுக்கு கடந்த 10 நாட்களாக தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சிறுவனை அழைத்து செல்லும்போது பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், தம்பதியரின் 7 வயது மகளுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இந்த நீரை குடித்ததால் தான் சிறுவன் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக விளக்கம் அளித்தார்.
அதில், வட மாநில சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக முதற்கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், சென்னை மாநகர் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.