நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸுக்கு விருப்பம் இல்லை என்றும், மாணவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண காங்கிரசார் முன்வரவில்லை என்றும் தெரிவித்தார்.
முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு மூலம் தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய தர்மேந்திர பிரதான், நீட் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டினார்.
மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி வரும் செவ்வாய்க்கிழமைக்குள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.