மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
நடைபாதை வியாபாரிகள் தங்களது வர்த்தக நிறுவனத்துக்கு உட்பட்ட பகுதியை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதாக கடை உரிமையாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனால் நடைபாதை வியாபாரிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்த போலீஸார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.