பிரபல இணைய மொழிமாற்று சேவையான GOOGLE TRANSLATE-ல் புதிதாக 110 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயிரம் மொழிகளை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிப்பதாக கூகுள் நிறுதெரிவித்துள்ளது.
இந்தப் பாடலில் மொழி தெரியாமல் வடிவேல் படும் பாட்டை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது நம்ம ஊர் முகங்களையும் உணவுகளையும் உள்ளம் தேடும்.
அந்த இடத்தின் மொழி புரியாததே அதற்கு முக்கிய காரணம். இன்றைய தேதியில் வெளி மாநிலத்துக்குச் செல்லும்போது மட்டுமல்ல, உள்ளூரில் இருக்கும் போதே பிற மொழிகளை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழியில் வெளியான ஆய்வு கட்டுரைகள், புத்தகங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் உதவும் வகையில் தொடங்கப்பட்டதே GOOGLE TRANSLATE சேவை.
2006-ஆம் ஆண்டு GOOGLE நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இந்த சேவையை பயன்படுத்தி மொழிமாற்றம் செய்ய முடியும். உதாரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிச் சொற்களுக்கான பொருளை தமிழில் அறிய முடியும்.
குறிப்பிட்ட மொழியை தேர்ந்தெடுத்து விளக்கம் தேவைப்படும் சொல்லை உள்ளீடு செய்து, அதற்கான பொருள் எந்த மொழியில் வர வேண்டும் என்பதை SELECT செய்தால் விடை கிடைத்துவிடும். இணையம் மற்றும் APP வழியாக GOOGLE TRANSLATE-ஐ இலவசமாக பயன்படுத்த முடியும். VOICE TO TEXT எனப்படும் குரல் வழி உள்ளீட்டு முறையும் இருப்பதால் பெரும்பாலானவர்கள் GOOGLE TRANSLATE-ஐ உபயோகித்து வருகின்றனர்.
பயனாளர்களை அதிகப்படுத்தும் நோக்கில் GOOGLE TRANSLATE-ல் 110 மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் புழக்கத்தில் இருக்கும் Awadhi மொழியும், ராஜஸ்தானைச் சேர்ந்த Marwadi மொழியும் அடங்கும். இதில் Awadhi பேச்சு வழக்கில் இருக்கும் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மொழிகளையும் சேர்த்து மொத்தம் 243 மொழிகளில் GOOGLE TRANSLATE-ஐ பயன்படுத்த முடியும். உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளை TRANSLATE-ல் சேர்க்க விரும்புவதாக GOOGLE நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆயிரம் மொழிகளை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.