ஜெயலலிதாவிடம் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பரிந்துரை செய்யும்படி கேட்டு கொண்டேன்!- முன்னாள் ஆளுநர் ராம் மோகன் ராவ்
Jul 26, 2025, 07:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயலலிதாவிடம் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பரிந்துரை செய்யும்படி கேட்டு கொண்டேன்!- முன்னாள் ஆளுநர் ராம் மோகன் ராவ்

Web Desk by Web Desk
Jun 29, 2024, 07:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தான் அழுத்தம் கொடுத்ததாலேயே அப்துல் கலாம் ஜனாதிபதியானார்” என்று புத்தக வெளியிட்டு விழாவில் தமிழக முன்னாள் ஆளுநர் ராம் மோகன் ராவ் தெரிவித்துள்ளார்.

2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தமிழக ஆளுநராக இருந்தவர் ராம்மோகன்ராவ். அவர் எழுதிய “Governorpet To Governor’s House A Hick’s Odysse” என்ற புத்தகம் வெளியீட்டு விழா தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன், ஆந்திரா மாநில முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தமிழக முன்னாள் ஆளுநர் ராம் மோகன் ராவ்,

“2002 முதல் 2004 வரை தமிழக ஆளுநராக பணியாற்றி உள்ளேன். தமிழகம் சிறந்த மாநிலம். ஆந்திர காவல்துறையில் டிஜிபி வரை பணியில் இருந்தது பல அனுபவங்களை கற்று தந்துள்ளது. பல சூழ்நிலைகளை கையாண்டுள்ளேன்.

இக்கட்டான சூழ்நிலையையும் பார்த்துள்ளேன். குறிப்பாக மத்திய உளவுத்துறையில் பணியாற்றியது தன்னை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. நான் எழுதிய புத்தகத்தில் என் அனுபவங்கள் பலவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சஞ்சீவி ரெட்டியை தான் நாங்கள் பரிந்துரைத்தோம். ஆனால் அதில் இந்திரா காந்தியோ வி.வி.கிரியை தான் ஜனாதிபதியாக ஆக்க விரும்பினார். இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் சஞ்சீவ் ரெட்டியே வெற்றி பெற்றார்.

இந்த சுவாரஸ்யத்தை புத்தகத்தில் பதிவிட்டுள்ளேன். இதே போல அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதியாக பரிந்துரை செய்தது நான் தான். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் அப்துல் கலாமை பரிந்துரை செய்யும்படி கேட்டு கொண்டேன். அவர் முதலில் ஒப்புக்கொண்டார்.

ஆனால் பிறகு ஜெயலலிதா அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். இருந்தாலும் என்னுடைய அழுத்தத்தால் இறுதியில் ஒப்புக்கொண்டார். அதை போல அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் கூட கிருணகாந்தை தான் ஜனாதிபதியாக்க முடிவு செய்தார். ஆனால் என்னுடைய முயற்சியாலேயே அப்துல் கலாம் ஜனாதிபதியானார். அதனை கூட புத்தகத்தில் எழுதி உள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,

“இந்த விழாவிற்கு மிகச்சிறந்த ஆளுமைகள் வந்துள்ளார்கள். எம்.கே.நாராயணன் தலைமையில் நான் பணியாற்றியது நல்ல அனுபவத்தை கற்றுத்தந்தது.
ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் பொருளாதார வல்லுனர் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்துள்ளார்.

ராம் மோகன் ராவ் எழுதியுள்ள புத்தகம் சிறப்பான புத்தகம். அனைவரும் படிக்க வேண்டும். அவர் தற்போதும் இளைமையாக இருக்கிறார். அவர் 100 வயதுக்கு மேல் வாழ வேண்டும். நான் நாகலாந்து கவர்னராக இருந்தபோது அந்த மாநிலத்தில் 110 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்களை சந்தித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

Tags: I asked Jayalalithaa to nominate Abdul Kalam as President!- Former Governor Rammohan Rao
ShareTweetSendShare
Previous Post

மலையேற்றப் பயணக் குழுவான விஜய் குழுவை வரவேற்ற அமித் ஷா!

Next Post

மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாகக் கூறுவது ஆகச் சிறந்த நகைச்சுவை! – அண்ணாமலை

Related News

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies