வார விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.