ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் இருப்புப் பாதை பணி நூறு சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், இன்னும் 500 மீட்டர் பணி மட்டுமே நிறைவடைய வேண்டியது இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாம்பனையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் இருப்புப் பாதை பழமையாகிவிட்டதால், அதன் அருகில் மற்றோர் இருப்புப் பாதை அமைக்கும் பணி கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கியது.
இதற்காக மத்திய அரசு 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. தற்போது கட்டுமான பணி நிறைவடைந்திருப்பதால், விரைவில் இந்த இருப்புப் பாதை ரயில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.