முதுநிலை நீட் தேர்வுக்கான புதிய தேதி ஜூலை 1 அல்லது 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், கடந்த 23-ம் தேதி நடைபெறவிருந்த இத்தேர்வை, மத்திய சுகாதாரத்துறை ஒத்தி வைத்தது.
இதேபோல், எழுத்து முறையில் நடைபெற்று வரும் இளநிலை நீட் தேர்வை, இணைய வழிக்கு மாற்றுவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.