வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே டிராக்டர் ரோலரில் சிக்கி 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூக்கலபள்ளியைச் சேர்ந்த தாமோதரன், தனது மகன் பரத்குமாரை விடுமுறையையொட்டி விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நிலத்தில் வேர்க்கடலை விளைவிப்பதற்காக டிராக்டர் மூலம் உழும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்புறம் உள்ள ரோலர் ஏறியதில் பரத்குமார் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.