இலங்கை எம்.பி. இரா.சம்பந்தன் உடல்நலக்குறவால் காலமானார். அவருக்கு வயது 91.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அதனையடுத்து 2001 முதல் தற்போது வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல்செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.