மேற்குவங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேற்குவங்கத்தில் நடுரோட்டில் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்படும் சம்பவம், அம்மாநிலத்தில் கொடூர ஆட்சி நடைபெறுவதை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீதான தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் நியாயப்படுத்துவதாக சாடியுள்ள அவர், மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.