குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, அதன் உரிமையாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறவைப்பதாக கூறி சுமார் 27 மாணவர்களிடம் அவர் தலா 10 லட்சம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.
நீட் முறைகேடு தொடா்பாக, தற்போது வரை 6 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.