மொராக்கோவின் கேனரி தீவில் மாயமான பிரிட்டன் இளைஞரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஜூன் 17-ம் தேதி கேனரி தீவான டெனெரிஃப் பள்ளதாக்கில் தவறி விழுந்த பிரிட்டன் இளைஞரை ஸ்பெயின் காவல்துறையினர் தேடி வந்தனர்.
அவரை தேடுவதில் சிரமம் ஏற்பட்டதால் பணியை நிறுத்துவதாக ஸ்பெயின் காவல்துறை அறிவித்தது.
இது தொடர்பான வழக்கில் நீதிபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்பெயின் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.