புதுச்சேரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.
லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சுவாமிக்கு பட்டாடைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதையடுத்து மங்கல வாத்தியங்களுடன் சுவாமி அம்பாள் திருக்கல்யணம் கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.